SKIP TO MAIN CONTENT

அடுத்த தேர்தலில் லேபர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்- கருத்துக்கணிப்பு!

sbs
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

The Australian நிறுவனம் இறுதியாக மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் பிரகாரம் புதிய பிரதமர் Scott Morrison-க்கு மக்கள் மத்தியிலான ஆதரவு பெருமளவில் அதிகரித்திருக்கிறது.

எனினும் இருகட்சி விருப்பு அடிப்படையில் எதிர்கட்சியான லேபர்கட்சி ஆளும் கூட்டணி அரசைப் பின்தள்ளி 44-56 என தொடர்ந்தும் 40வது கருத்துக்கணிப்பில் முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக லிபரல் கட்சிக்குள் இடம்பெற்ற தலைமைத்துவ மாற்றம் மற்றும் இழுபறிகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், லேபர் கட்சி தலைவர் Bill Shorten-க்கான மக்கள் ஆதரவு புதிய பிரதமர் Scott Morrison-ஐ விட கூடுதலாக காணப்பட்டது.

எனினும் இன்று வெளியாகியிருக்கும் புதிய கருத்துக்கணிப்பின்படி  மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Scott Morrison எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விடவும் 36-42 என முன்னிலை பெற்றுள்ள அதேநேரம் முன்னாள் பிரதமர் Malcolm Turnbull பெற்ற புள்ளிகளை விடவும் Scott Morrison அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இருப்பினும் இருகட்சி விருப்பு அடிப்படையில் கடந்த 40 கருத்துக்கணிப்புக்களிலும் லேபர் கட்சியே தொடர்ந்தும் முன்னிலை பெற்றுள்ளதால் அடுத்துவரும் தேர்தலில் ஆளுங்கட்சி பலத்த தோல்வியைச் சந்திக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now