SKIP TO MAIN CONTENT

அதிவேக சேவை வழங்குவதில் பெர்த் Ambulance முதலிடம்!

HEALTH PRODUCTIVITY REPORT
In Perth, ambulances reached urgent patients within 14.1 minutes in 90 per cent of cases in 2017/18. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

அழைத்த இடங்களுக்கு அதிவேகமாக சென்று சேவை வழங்குவதில் கடந்த வருடம் பெர்த் Ambulance முதலிடத்தை பெற்றிருப்பதாகவும் Tasmania மற்றும் சிட்னி Ambulance சேவைகள் பாதிக்கப்பட்டவர்களை சென்றடையும் நேரம் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும்போது மோசமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுகாதார திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டின் வளர்ச்சி தொடர்பான விவரங்களை ஆராயும் ஆணைக்குழு மேற்கொண்ட ஆய்வறிக்கையிலேயே இந்த விவரம் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் 90 வீதமான அழைப்புக்களுக்கு பெர்த் Ambulance, சராசரியாக 14.1 நிமிடங்களில் சென்று சேவையளித்திருக்கிறது என்றும் ஆனால் சிட்னி Ambulance அழைத்தவர்களை சென்றடைவதற்கு 20.8 நிமிடங்கள் எடுத்திருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கன்பரா Ambulance சேவை சராசரியாக 14.7 நிமிடங்களில் அழைத்தவர்களின் இடத்துக்கு அதி வேகமாக சென்று தங்களது சேவையை வழங்கியிருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், அனைத்து மாநிலங்களிலும் Tasmania மிக மோசமான நிலையில் காணப்படுவதாகவும், அவசரமாக அழைக்கும் இடங்களை சென்று சேருவதற்குTasmania Ambulance சராசரியாக 29.4 நிமிடங்களை எடுத்திருப்பதாகவும் மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now