Highlights:
- 2023க்குரிய பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுமாறு விக்டோரிய மாநில தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறார்
- ஆய்வக கசிவு COVID-19 தொற்றுநோயை ஏற்படுத்தியிருக்கலாம்: FBI தலைவர்
ஓமிக்ரான் திரிபு மற்றும் அதன் துணைத்திரிபுகளான BA.4/BA.5 வகைகளை இலக்காகக் கொண்ட Modernaவின் புதிய கோவிட்-19 தடுப்பூசியை, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு வழங்குவதற்கு Australian Technical Advisory Group on Immunisation (ATAGI) ஒப்புதல் அளித்துள்ளது.
குறித்த தடுப்பூசிக்குரிய ஒப்புதலை Therapeutic Goods Administration பிப்ரவரி 17 அன்று வழங்கியிருந்தது.
ஆஸ்திரேலியா மூன்று மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது எனவும், தகுதியான ஆஸ்திரேலியர்கள் ஏப்ரல் முதல் அவற்றை பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை பயன்படுத்துவது மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பான பேராசிரியர் Jane Haltonனின் சுயாதீன மதிப்பாய்வின் எட்டு பரிந்துரைகளில் ஏழு பரிந்துரைகளை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த விடயத்தில் அரசு அதிக வெளிப்படைத்தன்மையாக இருத்தல் மற்றும் National Medical Stockpile வைத்திருக்கும் மருந்துகளைக் பெற்றுக்கொள்வது குறித்த எட்டாவது பரிந்துரையை அரசு ஓரளவு ஏற்றுக்கொண்டது.
"பாதுகாப்பு உட்பட சில அத்தியாவசிய காரணங்களுக்காக சில தகவல்கள் வெளியிடப்படாது" என்று அரசு கூறியுள்ளது.
பெடரல் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை ஏப்ரல் 2022 இல் 35.6 சதவீதமாக காணப்பட்டதாகவும், ஆகஸ்ட் 2022 இல் இது 52.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
NSW மாநிலத்தில் வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த வாரம் பதிவான 6545 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 7163 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
விக்டோரியாவில் இந்த வாரம் 3,016 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 3052 ஆக இருந்தது.
பரந்தளவிலான தடுப்பூசி நிபந்தனைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு NSW Premier Dominic Perrottet அழைப்பு விடுத்தார்.
சிட்னி ரேடியோ 2 GBயிடம் பேசிய அவர், கோவிட் வைரஸ் பரவுவதில் தடுப்பூசிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
2023க்குரிய பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுமாறு விக்டோரிய மாநில தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறார்.
பெரும்பாலான விக்டோரியர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கள் கடைசி தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருந்தனர் எனவும், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி இப்போது கணிசமாக குறைந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
COVID-19 தொற்றுநோய் ஆய்வக கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என, அமெரிக்க Federal Bureau of Investigation இயக்குனர் Christopher Wray , Fox நியூஸிடம் கூறினார்.
"தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் Wuhanனில் இடம்பெற்ற ஒரு சாத்தியமான ஆய்வக சம்பவம் என்று FBI சில காலமாக மதிப்பிட்டுள்ளது" என்று திரு Wray கூறினார்.
இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 28 நாட்களில் உலகளாவிய COVID தொற்றுகள் 76 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இறப்புகளில் 66 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் அதிக அளவில் COVID தொற்றுகள் பதிவாகியுள்ளன.
ஓமிக்ரான் துணைத்திரிபுகளான BF.7, BQ.1, BA.2.75, CH.1.1, XBB, XBB.1.5 மற்றும் XBF ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து வருவதாக WHO கூறியுள்ளது.
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.