ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களில் எந்த பிரிவில் பட்டப்படிப்பு படிக்க எவ்வளவு ATAR (Australian Tertiary Admission Rank) மதிப்பெண் தேவை என்று யாருக்கும் தெளிவாகப் புரிவதில்லை. ஏனெனில் இந்த பிரிவில் பட்டப் படிப்பு படிக்க இவ்வளவு ATAR மதிப்பெண் தேவை என்று பல்கலைக்கழகங்கள் தங்களது இணையதளத்தில் அறிவித்திருந்தாலும், உண்மையில் அந்த அளவு உயர் ATAR மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குத்தான் அந்த பட்டப்படிப்பு படிக்க இடம் தரப்பட்டுள்ளதா அல்லது அதைவிட ATAR மதிப்பெண் குறைவான மாணவர்களுக்கும்கூட பட்டப்படிப்பு படிக்க இடம் தரப்பட்டுள்ளதா என்பது வெளியில் யாருக்கும் தெரியாது.
எனவே இந்த தகவலை பல்கலைக்கழகங்கள் வெளியில் கூறவேண்டும், வெளியில் தகவலை கூறாமல் இதை ரகசியமாக வைத்திருப்பது ஒரு விளையாட்டில் வெற்றிபெறுவது போன்ற ஒரு நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது என்று கல்வித்துறை அமைச்சர் Simon Birmingham கூறியுள்ளார். எனவே கடந்த ஆண்டு எவ்வளவு குறைவான மற்றும் அதிகமான ATAR மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் எந்த பிரிவில் பட்டப்படிப்பு படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பல்கலைக்கழகங்கள் வெளியிடவேண்டும் என்று அரசு பல்கலைக்கழகங்களை நிர்பந்தித்துள்ளது. அரசின் நிர்பந்ததிற்கு செவிமடுக்காமல் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டால் அந்த பல்கலைக்கழகங்களின் நிதியை 2018 ஆண்டு முதல் குறைப்பது என்று தாம் திட்டமிடுவதாக கல்வித்துறை அமைச்சர் Simon Birmingham கூறியுள்ளார்.
Share
