SKIP TO MAIN CONTENT

JobKeeper மோசடி: பல நிறுவனங்களிடமிருந்து 75 மில்லியன் டொலர்கள் ATO சுவீகரிப்பு!

Getty Images
Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

கொரோனாவினால் தங்களது வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டது என்று போலித்தகவல்களை வழங்கி, அரச கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முயற்சித்த வர்த்தகர்களிடமிருந்து சுமார் 75 மில்லியன் டொலர்களை மீட்டிருப்பதாக ATO ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு- அவற்றின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு- JobKeeper கொடுப்பனவை அரசு அறிவித்திருந்தது. 

இந்தப்பேரிடர்கால நிதியை அரசிடம் கோருவதற்கு குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வியாபரத்தில் கொரோனாவினால் ஏற்பட்ட நட்டத்தை நிரூபிக்கவேண்டியிருந்தது.

ஆனால், போலியான தகவல்கள் வழங்கியதன் மூலம் வியாபாரத்தில் நட்டத்தை காண்பித்த வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான 9000 முறைப்பாடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையினால், இதுவரை சுமார் 75 மில்லியன் அரசு நிதி, குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மீளப்பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now