SKIP TO MAIN CONTENT

வரி அலுவலகத்தின் பெயரால் இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

ATO scam
Source: Getty Images

1 min read

Published

Updated


Skip to article content

ATO-வரி அலுவலகத்தின் பெயரால் இடம்பெறும் புதிய மோசடி தொடர்பில் ஆஸ்திரேலிய காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வரி அலுவலகத்திலிருந்து அழைப்பதாகக்கூறி தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், உங்களது TFN-வரி இலக்கம் களவாடப்பட்டுவிட்டதாக தெரிவிப்பதுடன் உள்ளுர் காவல்நிலையத்திலிருந்து அதிகாரி ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துவிடுவார் என குறிப்பிடப்படுகிறது.

அதன்பின்னர் மற்றுமொரு மோசடிக்காரர் காவல்நிலையத்திலிருந்து தொடர்புகொள்வதாகக்கூறி உங்களுடன் பேசி பல தனிப்பட்ட தகவல்களைப் பெறமுயற்சிப்பதுடன் பணம்பறிக்கும் முயற்சியிலும் இறங்குவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி காரணமாக பல ஆயிரக்கணக்கான டொலர் பணம் ஆஸ்திரேலியர்களிடமிருந்து சூறையாடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான அழைப்புக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் உடனடியாக காவலதுறையிடம் முறையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்தால் நேரடியாக வரி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்குமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now