SKIP TO MAIN CONTENT

நமது myGov தகவலைத் திருட இணையத்திருடர்கள் வருகின்றனர் - ATO எச்சரிக்கை

நாட்டின் நிதியாண்டு நிறைவடையும்வேளையில் குறிப்பாக நாம் வரி செலுத்தும் கணக்கை ஜூன் மாதம் நிறைவு செய்யவிருக்கும் இத்தருணத்தில், மின்னஞ்சல் வழியாக நமது வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருட சில திருட்டுக் கும்பல் முற்படலாம். இப்படியான இணைய வழியாக புகுந்துள்ள புதிய நூதனத்திருடர்கள் குறித்து ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ATO
Source: ATO

1 min read

Published

By Raysel


Skip to article content

மொபைல் போனில் இயங்கும் myGov செயலியில் அல்லது கணினியில் இயங்கும் myGov இணைய தளத்தில் நமது தகவல்களை சரிபார்க்குமாறு கோரி, போலி மின்னஞ்சலொன்று பரவலாக உலாவருவதாகவும், இந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பை அழுத்தி எந்த தகவலையும் வழங்கவேண்டாம் என்றும் வரித்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது

myGov தளத்திற்கு புதிய தகவல் அல்லது ஆவணம் கிடைக்கப்பெற்றிருந்தால், அது குறித்து myGov தளம் குறுந்தகவல் (SMS) ஊடாக அல்லது மின்னஞ்சல் (email) வழியாக உங்களுக்கு தெரியப்படுத்தும் என்று ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) கூறியுள்ளது. அதன்பின்னர், அந்த நபர் தனது கடவுச்சொல்லை பதிவுசெய்து myGov தளத்திற்குள் நுழைந்து, குறிப்பிட்ட தகவலை அறிந்துகொள்ளலாம். இதுவே myGov தளத்தை உபயோகிப்பது தொடர்பான பாதுகாப்பான நடைமுறை என்று ATO கூறியுள்ளது.

மின்னஞ்சல் வழியாக இணைப்புகள் எதையும் அனுப்பி, வாகன ஓட்டுநர் அனுமதி பத்திர தகவல்ளையோ, பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டு தகவல்களையோ myGov தளத்திற்குள் நுழைவதற்கு கோரிக்கை விடுப்பதில்லை. இது தொடர்பாக myGov பயனாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் ATO தெரிவித்துள்ளது.

தனிப்பட்டவர்களின் தகவல்களை திருடுபவர்கள் குறித்து முறையிடுவதற்கு 1800 941 126 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம்.

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now