SKIP TO MAIN CONTENT

கொரோனா பரவலை சிறந்த முறையில் கையாண்ட முதல் 10 நாடுகள்!

New Zealand Prime Minister Jacinda Ardern stands with Australian Prime Minister Scott Morrison in 2020.
New Zealand Prime Minister Jacinda Ardern stands with Australian Prime Minister Scott Morrison in 2020. Source: Getty Images

2 min read

Published


Skip to article content

கொரோனா கிருமிப்பரவல் சூழலை ஆகச் சிறந்த, ஆக மோசமான முறையில் கையாண்ட நாடுகளின் பட்டியலை ஆஸ்திரேலியாவின் Lowy Institute வெளியிட்டுள்ளது.

இறப்புவிகிதம், பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள், கோவிட் சோதனை உட்பட 6 அம்சங்களின் அடிப்படையில் சுமார் 98 நாடுகளை ஆய்வு செய்த அதனடிப்படையில் குறித்த நாடுகளை Lowy Institute பட்டியலிட்டுள்ளது.

இதன்படி ஆகச் சிறந்த முறையில் கிருமிப்பரவலைக் கையாண்ட நாடாக நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8வது இடத்திலுள்ளது. இந்தியா 86வது இடத்திலுள்ளது. போதிய தரவுகள் கிடைக்காததால் சீனா இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.

முதல் 10 இடங்களிலுள்ள நாடுகளின் விபரங்கள் வருமாறு:

  1. நியூஸிலாந்து
  2. வியட்நாம்
  3. தைவான்
  4. தாய்லாந்து
  5. சைப்ரஸ்
  6. ருவாண்டா
  7. ஐஸ்லாந்து
  8. ஆஸ்திரேலியா
  9. லாத்வியா
  10. இலங்கை

கடைசி 10 இடங்களிலுள்ள நாடுகள்:

89. சிலே

90. உக்ரெய்ன்

91. ஓமான்

92. பனாமா

93. பொலிவியா

94. அமெரிக்கா

95. ஈரான்

96. கொலம்பியா

97. மெக்ஸிக்கோ

98. பிரேஸில்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now