மோடி, மொரிஸன் சந்திப்பு, புதிய தொழில் நுட்பத்திற்கு ஆர்வம்

Covid பெருந்தொற்று தொடங்கிய காலத்திற்குப் பின்னர் முதல் தடவையாக ஆஸ்திரேலிய மற்றும் இந்திய தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தார்கள். எரிசக்தி உற்பத்தியில் காலநிலை மாற்றத்தையும் கருத்தில் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டினார்கள்.

Prime Minister Scott Morrison holds a bilateral meeting with the Prime Minister Narendra Modi of India in Washington.

Prime Minister Scott Morrison holds a bilateral meeting with the Prime Minister Narendra Modi of India in Washington. Source: Prime Minister's Office

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக இணைந்து QUAD என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலை நகர் Washingtonஇல் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.  இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருக்கும் எமது பிரதமர் Scot Morrison இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார, ராணுவ உறவுகளை வலுப் படுத்துவது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாகத் தெரிய வருகிறது. இந்த சந்திப்பு முடிந்த பின்னர், “வளரும் நாடுகளில் புதிய தொழில் நுட்பங்களை நாம் அறிமுகப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பலரது இலட்சியங்கள் சாத்தியப்படாமல் போகலாம் என்று நான் அஞ்சுகிறேன்,” என்று பிரதமர் Scot Morrison அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைத்து இடங்களிலும் நாம் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்
“காலநிலை மாற்றத்தில் நாம் ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பினால், முன்னேறிய பொருளாதாரங்களில் மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் நாம் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியா வருமாறு பிரதமர் Scot Morrison இடம் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் Scot Morrison கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.  ஆனால் நாடு முழுவதும் காட்டுத்தீ பரவியிருந்ததால் அவரது பயணம் தடைப்பட்டது.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

By Kulasegaram Sanchayan
Source: AAP, SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மோடி, மொரிஸன் சந்திப்பு, புதிய தொழில் நுட்பத்திற்கு ஆர்வம் | SBS Tamil