நிலத்தின் அடியில் தானாக செயல்படக்கூடிய ‘ரோபோ’ தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த அமெரிக்க அரசாங்க ஆராய்ச்சி நிறுவனமான DARPA முன்னெடுப்பில் நடத்தப்பட்ட போட்டியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நிலத்தின் அடியில், இயல்பான ஒரு சூழலில் காயமடைந்தவர்கள், பொருட்கள் போன்றவற்றை மீட்டெடுத்தல் மற்றும் நச்சு வாயுக்கள் இருப்பதைக் கண்டறிதல் போன்ற செயற்பாடுகளில் ரோபோக்களை இயக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
பொருட்களை சரியாக அடையாளம் காண்பதற்கும், அவை எங்கிருந்தன என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்கவும், நிலப்பரப்பை வரைபடமாக்குவதற்கும், தானாக இயங்கும் திறனுக்கும், தகவல் தொடர்புகளைப் பேணியதற்கும் புள்ளிகள் வழங்கப்பட்டன.

அமெரிக்காவின் Kentucky மா நிலத்தின் Louisville என்ற இடத்திலுள்ள Louisville Mega Cavern என்ற மாபெரும் குகைக்குள் நடைபெற்ற இறுதி நிகழ்வுடன் போட்டி முடிவடைந்தது. போட்டி முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் அறிவிக்கப்பட்டன.

இந்தப் போட்டியில் வென்ற ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள், ரோபோ ஆராய்ச்சிக்காக மறு முதலீடு செய்யப்படும் என்று CSIRO அறிவித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
