இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற பின்னணியில் அங்கிருந்து விமானங்கள் ஆஸ்திரேலியா வருவது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
இது மே 15ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றையதினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு oxygen supplies, ventilators மற்றும் personal protective equipment உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஆஸ்திரேலியா அனுப்பிவைக்கவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் சிக்கியுள்ள சுமார் எட்டாயிரம் வரையான ஆஸ்திரேலியர்களுக்கு நெருக்கடி நிலை தொடர்பிலான விசேட செயற்றிட்டம் ஊடாக உதவி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
