SKIP TO MAIN CONTENT

'ஆஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடு டிசம்பர் 15 முதல் தளர்த்தப்படுகிறது'

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து Omicron வைரஸ் திரிபுக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியிருந்த நிலையில் அதில் தற்போது தளர்வு கொண்டுவரப்படுகின்றது.

international arrival
Source: AAP Image/Aaron Chown/PA Wire

3 min read

Published

Updated


Skip to article content

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடுகள்,  திட்டமிட்டபடி  எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி தளர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சர் Greg Hunt  தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் தளர்த்தப்படவிருந்த சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகள், Omicron பரவலையடுத்து  இரண்டு வாரங்களுக்கு அதாவது டிசம்பர் 15 வரை பிற்போடப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, நாளை மறுதினம் 15 ம் திகதி முதல் எல்லைக் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதில் மாற்றமில்லை எனவும் சுகாதார அமைச்சர் Greg Hunt இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இதன்படி வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே இங்கு வரமுடியும்.

இவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், அந்தந்த மாநிலங்களின் சட்டங்களுக்கேற்ப அமையவுள்ளது.

அரசின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா விசா வைத்திருக்கும் சுமார் 2 லட்சம் பேர், எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 1ம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், விதிவிலக்கு அனுமதி பெறாமல் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பக்கூடியதாக உள்ள பின்னணியில், தற்போது ஏனையவர்களும் ஆஸ்திரேலியா வருவதற்கான வழியேற்பட்டுள்ளது.

அதேநேரம் நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூருடன் செய்துகொள்ளப்பட்டுள்ள,  கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டினைப் போலவே, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனும் ஆஸ்திரேலியா ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளது.

இதன்கீழ் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டவர்கள் டிசம்பர் 15 முதல், ஆஸ்திரேலியாவுக்கு பயணம்செய்யமுடியும்.

கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now