SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அகதிகள் விடயத்தில் இருநாடுகளின் தலையீட்டை கோரும் ஐ.நா!

SBS
Source: SBS News

1 min read

Published

Updated



Skip to article content

பாப்புவா நியூகினியிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசும் பாப்புவா நியூகினி அரசும் இணைந்து உரிய பதிலொன்றை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Michelle Bachelet தெரிவித்தார்.

அங்குள்ள அகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்துவரும் நிலைப்பாடு குறித்து அவர் கடும் விசனமும் வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலிய அகதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் அவர்கள் நீண்ட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதானது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு புறம்பானது. பாதிக்கப்பட்டுள்ள இந்த அகிதகள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அனைவரும் எங்களைப்போன்ற மனிதர்களே. நான்கூட Chile-யின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னர் அகதிதான்-என்றும் Michelle Bachelet கூறினார்.

ஆஸ்திரேலிய அரசும் பாப்புவா நியூகினி அரசும் ஒரே விதமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். காரணங்களை கூறி காலத்தை கடத்துவதன் மூலம் அப்பாவி அகதிகளின் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்தக்கூடாது - என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now