SKIP TO MAIN CONTENT

கொரோனா: விக்டோரியாவில் புதிதாக 270 பேருக்கு தொற்று!மேலும் இருவர் பலி!!

Victorian Premier Daniel Andrews
Victorian Premier Daniel Andrews Source: AAP

1 min read

Published


Skip to article content

விக்டோரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களுடன் விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகவும் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் உயர்ந்துள்ளது.

எண்பது வயதுகளிலுள்ள முதியவர்கள் இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 270 என்று விக்டோரிய  Premier Daniel Andrews தெரிவித்தார்.

இவர்களில் 28 பேர் கொரோனா செறிவான இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்களை சேர்ந்தவர்கள் என்றும் மீதிப்பேர் தெரியாத இடங்களிலிருந்து தொற்றுக்குள்ளானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now