PCR சோதனைக்குப் பதிலாக Antigen சோதனையை, பயணத்திற்கு 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொண்டால் போதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கான சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட நாள் முதல் PCR சோதனை கட்டாயமான நடைமுறையாக பேணப்பட்டுவந்தது.
குறிப்பிட்ட பயணியொருவர் தனக்கு கோவிட் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான சிறந்த முறையாக PCR சோதனை காணப்படுகின்றபோதிலும், ஆஸ்திரேலியா தற்போது Antigen சோதனையையும் முதன்மை சோதனையாக ஏற்றுக்கொள்வதால், இதனை சர்வதேச பயணத்திலும் நடைமுறைப்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி பயணியொருவர் ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் Antigen சோதனையை மேற்கொண்டு தனக்கு கோவிட் இல்லையென்பதை நிரூபித்தால் போதுமானது.
இப்புதிய நடைமுறை நாளை ஜனவரி 23 முதல் நடைமுறைக்குவருகிறது.
ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், அவர்களது நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள், குறிப்பிட்டவகை ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் தற்போது நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.