SKIP TO MAIN CONTENT

e-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சட்டம்!

A man smoking an electronic cigarette.
A man smoking an electronic cigarette. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

Vape என்னும் முறையால் நெருப்பில்லாமல் புகை பிடிக்கும் e-சிகரெட் மற்றும் அதற்குரிய மீள்நிரப்பும் நிக்கொட்டின்(refills) ஆகியவற்றை வெளிநாடுகளிருந்து கொள்முதல் செய்வதற்கான தடையை, எதிர்வரும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்த ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவி ன் அனைத்து மாநிலங்களிலும் திரவநிக்கொட்டினை, e- சிகரெட் வழியாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலும் விற்பனை செய்வதற்கான தடை நடைமுறையில் இருப்பதால் பலரும் வெளிநாடுகளிலிருந்து இவற்றை கொள்வனவு செய்துவந்தனர்.

இனிவரும் நாட்களில் e - சிகரெட் பயன்படுத்துபவர்கள் மருத்துவர் ஒருவரின் பரிந்துரையுடன், சுகாதார திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அல்லது medical supplier ஊடாக மாத்திரமே இவற்றைப் பெற்றுக்கொள்ளும்வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த தடையின் வழியாக பெற்றுக்கொள்ளப்படுகின்ற பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசால் பிரேரிக்கப்பட்டுள்ள இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக தற்போது e - சிகரெட் பயன்படுத்தும் பலர், மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு திரும்பவாய்ப்புள்ளதாக சில தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now