நியூசிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற விமானப்பயணம் எதிர்வரும் 19ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில், கொரோனா பரவல் குறைவாக உள்ள ஏனைய சில நாடுகளுடன் பயண ஏற்பாட்டினை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர், ஜப்பான், வியட்நாம் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டினை மேற்கொள்வதற்கு ஆலோசிக்கப்பட்டுவருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை எனவும் எந்த நாட்டுடனும் பயண ஏற்பாடுகளை உறுதிசெய்வதற்கான சூழல் தற்போது இல்லை எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்தியா- ஆஸ்திரேலியா இடையில் இவ்வாறான பயண ஏற்பாடு சாத்தியப்படுமா என கல்வி அமைச்சர் Alan Tudge-இடம் கேட்டபோது அதற்கான சாத்தியம் தற்போதைக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இந்தியாவுடனான பயண ஏற்பாடு தொடர்பில் தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கமுடியாது என அமைச்சர் Alan Tudge தெரிவித்துள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
