அமெரிக்கா தலைமையிலான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மத்திய அமெரிக்கக் கண்டத்திலிருந்து மேலதிக அகதிகளை உள்வாங்கவுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் ஏறத்தாழ 19000 அகதிகள் இங்கு குடியமர்த்தப்படவுள்ளனர். New York நகரில் நடைபெறுகின்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர் தொடர்பிலான உயர்மட்ட மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போதே ஆஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull, அகதிகள் பற்றிய அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆஸ்திரேலியா தற்போது வருடத்துக்கு 14000 அகதிகளை இங்கு குடியமர்த்தி வருகின்றது. இத் தொகையானது வருகிற 2018ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 18750 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
Australia will take refugees from Central America as part of a US-led program, and maintain its plan to increase overall resettlement numbers to almost 19,000 in two years.
Prime Minister Malcolm Turnbull made the announcement during a speech to President Barack Obama's invitation-only high-level summit on refugees and migration in New York on Tuesday.
The initiative was revealed alongside a commitment by Australia to maintain its increased refugees resettlement intake at 18,750 from mid-2018, up from about 14,000 now.
