Hypersonic Long-Range Missiles என்றால் என்ன?
Hypersonic Long Range Missiles என்ற நீண்டதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை எப்படி வேறுபடுகிறது என்று பார்ப்போம். இந்த புதிய, மிக வேகமான hypersonic long range missiles என்ற ஏவுகணைகள், ஒலியின் வேகத்தைவிட 5 மடங்கு அதிகமான வேகத்தில் ஊடுருவி செல்லக்கூடியவை என்றும் 2000 கி. மீட்டர்களுக்கு அதிகமான தூரம் பயணிக்கக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஏவுகணைகள் நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் என்றபோதிலும், ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பிலிருந்து மட்டுமல்லாது, ஜெட் ரக போர்விமானங்களிலும் போர்க்கப்பல்களிலும் பொருத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

சீனா தரும் அச்சுறுத்தல்
எதிர்காலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் பசிபிக் பிராந்தியத்தில் உருவானால் அல்லது போர் வெடித்தால், AUKUS அமைப்பு இதனை முறியடிக்க ஆயத்தமாக, தயாராக இருப்பதே இந்த அதி நவீன ரக ஏவுகணை தயாரிப்பின் நோக்கம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பசிபிக் பிராந்தியத்தில் சீனா தற்போது செல்வாக்கு செலுத்த எடுத்துவரும் முயற்சிகளை கருத்தில்கொண்டே இந்த ஏவுகணைகளை ஆஸ்திரேலியா தயாரிப்பது தொடர்பான இணக்கப்பாட்டை மூன்று நாடுகளும் இணைந்து எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ரஷ்யாவின் ஊடுருவல் காரணமாக உக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமைகளவிட மிகமோசமான நிலைமை இப்பிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று விடுக்கப்பட்டுவரும் எச்சரிக்கைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
தாய்வானை தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துவரும் நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது இந்த தசாப்தத்தின் இறுதிகளில் பசிபிக் பிராந்தியத்தில் ‘சீனாவுடன் தவிர்க்க முடியாத இராணுவ பலப்பரீட்சை ஒன்றில் ஈடுபடவேண்டிய கட்டாயம் உருவாகும் என்பதால் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டிருப்பதாக’ Australian Strategic Policy Institute ஐச்சேர்ந்த Senior Analyst , Malcolm Davies கூறுகிறார்.
‘இதன்காரணமாக அதிநவீன ஆற்றல்மிகு இராணுவ தளபாடங்களையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொள்ள இப்போதே நிதி ஒதுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும்’ அவர் கூறுகிறார்.
‘முக்கியமாக, டார்வின் நகரம் மற்றும் அதன் வெளியிலுள்ள பகுதிகள் எதிரிகளால் தாக்கப்படும் அபாயம் நிறையவே இருப்பதாகவும்’ அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளைவிட மிக மோசமான பாதிப்புகளை நாம் சந்திக்கவேண்டி ஏற்படும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய தருணமிது’ என்றும் அவர் கூறுகிறார்.

சீனா புதியவகை cruise missiles களை தயாரித்திருக்கிறது என்ற செய்தியும் இந்த cruise missilesகள் ஆஸ்திரேலிய மற்றும் அதன் நட்பு நாடுகளுடைய கடற்படைகளுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் இந்த புதிய cruise missiles, hypersonic இற்கு நிகரான வேகத்தில் செல்லக்கூடியவை என்றும் நம்பப்படுகிறது. Australian strategic Policy Institute ஐச்சேர்ந்த Dr. Sam Goldsmith கருத்து தெரிவிக்கும் போது ‘சீனாவின் இந்த புதியவகை cruise missiles களை வானில் தேடி கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்றும், இவை anti missile என்ற ஏவுகணை ஊடுருவமுடியாத தொழில்நுட்பங்களை செயலிழக்கச்செய்ய வல்லவை என்றும் கப்பல்களை மூழ்கடிக்கும் வல்லமையுள்ளவை என்றும் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா: உறவு நெருக்கமும், ஆயுத தயாரிப்பும்
ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் நிரமாணிப்பது தொடர்பாக AUKUS அமைப்பு கடந்த ஆண்டு அறிவித்ததோடு, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா எனும் மூன்று நாடுகளின் தலைவர்களும் இணைந்து புதிய அறிக்கை ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்கிறார்கள். ‘ Hypersonic and counter hypersonic ஏவுகணைகளையும் electronic warfare capabilities என்ற புதிய electronic போராயுதங்களையும், பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள் தளபாடங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், முத்தரப்பு தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு என்பன தொடர்பாகவும் இணைந்து செயல்படப் போவதாக’ இந்த அறிக்கை சொல்கிறது. இதன்மூலம் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா எனும் மூன்று நாடுகளும் பாதுகாப்பு அம்சத்திலும், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பிலும் இன்னும் அதிகமாக ஒத்துழைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தோ பசிபிக் பிராந்தியம் சுதந்திரமான பிராந்தியமாக இருப்பதை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ரஷ்யா அத்துமீறி யுக்ரைனுக்குள் நுழைந்து அங்கு இழைத்துவரும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், அழிவுகள் என்பவற்றை பார்க்கும்போது, இந்த நிலை இப்பிராந்தியத்தில் நிகழாதிருப்பதை உறுதிசெய்யவும் சட்டமும் ஒழுங்கும் அமைதியும் நிலைநாட்டப்பட்டு முரண்பாடுகள் அமைதியாகவும, பேச்சுவாரத்தைகளின் மூலமாகவும் தீர்க்பபடுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதும் பிரதான நோக்கமாகப் பார்க்ப்படுவதாக ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா எனும் மூன்று நாடுகளின் AUKUS அமைப்பின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ‘ Hypersonic and counter hypersonic ஏவுகணைகளையும் electronic warfare capabilities என்ற புதிய electronic போராயுதங்கள் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள cyber capabilities, artificial intelligence மற்றும் undersea capabilities போன்ற தொழில் நுட்பங்களுக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஏனைய நட்பு நாடுகளின் சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் AUKUS அமைப்பின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ரஷ்யா அண்மையில் புதியவகை Kinzhal Hypersonic missile ஐ உக்ரைனில் பயன்படுத்தியிருப்பதாக வந்த செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரஷ்யா முதன்முதலாக இவ்வகை ஏவுகணைகளை போரில் பயன்படுத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது.

இந்த பின்னணியில் ‘ Hypersonic and counter hypersonic ஏவுகணைகளையும் electronic warfare capabilities என்ற புதிய electronic போராயுதங்கள் தயாரிப்பதிலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா எனும் மூன்று நாடுகளின் AUKUS அமைப்பு கவனம் செலுத்துவது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆஸ்திரேலியா சந்திக்கும் சவால் என்ன?
ரஷ்யா, சீனா நாடுகள் எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்கள் ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய கடற்படை இப்போது எதிரிகளிடமிருக்கும் ஆயுதங்களைக் கூட சமாளிக்க திறனற்றது; நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையிடம் இல்லை என்றும் Australian strategic Policy Institute ஐச்சேர்ந்த Dr. Sam Goldsmith கூறுகிறார். எனவே ஆஸ்திரேலியா தனது பாதுகாப்புத் திறனையும், தாக்குதல் திறனையும் கட்டாயம் வலுப்படுதியே ஆகவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய ஜெட் விமானங்களிலும், போர்க்கப்பல்களிலும் 3.5 பில்லியன் டாலர்கள் செலவில் நீண்டதூரம் ஊடுருவக்கூடிய - சுமார் 900 கி்.மீ, தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உடனடியாக பொருத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் Peter Dutton அறிவித்திருக்கிறார்.
தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகள் மொத்த சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளதாகவும் இதை பின்புலமாக வைத்தே இந்திய பசிபிக் பிராந்தியத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை கணிக்கவேண்டியுள்ளதாகவும் Peter Dutton தெரிவித்திருக்கிறார்.
சீனா தாய்வானை ஆக்ரமிக்கும் முயற்சியில் தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்திவருகிறது என்றும், தென்சீன கடற்பரப்பில் சீனா 20 நிலயங்களில் தமது கப்பல்படையை நிலைநிறுத்திவைத்துள்ளது என்றும் Peter Dutton எச்சரிக்கிறார். இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான சவால் இன்னும் 20 வருடத்திற்குப்பிறகு வரப்போகும் ஒன்றல்ல என்றும் அடுத்த சில வருடங்களிலேயே இந்த சவாலை நாம் எதிர்நோக்கக்கூடும் என்றும் இதன்காரணமாக ஏற்கனவே அரசு வாங்க இருக்கும் ஜெட் மற்றும் போர்க்கப்பல்களுக்கான ஏவுகணைகளும், மிக அதி நவீன கடல் கண்ணிவெடிகளும் விரைவில் ஆஸ்திரேலியா வந்து சேரும் என்றும் Peter Dutton குறிப்பிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
