தங்களது குழந்தைகளுக்குரிய மாதாந்த உதவிப்பணத்தை வழங்கவேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலிய நபருக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி தொடுத்த வழக்கில், குறிப்பிட்ட நபர் 8000 வருடங்களுக்கு இஸ்ரேலைவிட்டு வெளியேறமுடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த Noam Huppert என்பவருக்கும் இஸ்ரேல் பின்னணிகொண்ட அவரது மனைவிக்கும் இடையில் மணவிலக்கானதையடுத்து, அவரது மனைவி இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு 2011 ஆம் ஆண்டு இஸ்ரேல் சென்றுவிட்டார். அப்போது ஒரு குழந்தைக்கு ஐந்து வயது, மற்றைய குழந்தைக்கு மூன்று மாதங்கள்.
இதைத்தொடர்ந்து தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காக Noam Huppert 2012 இல் இஸ்ரேலுக்குப் போயிருக்கிறார்.
Noam Huppert இஸ்ரேலில் தங்கியிருந்த காலப்பகுதியில், தனது குழந்தைகளுக்கு முன்னாள் கணவனிடமிருந்து உதவியைக் கோரும் வழக்கொன்றினை, அவரது முன்னாள் மனைவி, இஸ்ரேல் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின்படி, இரண்டு குழந்தைகளும் 18 வயதாகும்வரைக்கும் ஒவ்வொரு மாதமும் தலா ஐயாயிரம் இஸ்ரேலிய பணத்தை, தனது முன்னாள் கணவன் வழங்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இவ்வாறு அவர் செலுத்த வேண்டிய பணத்தின் மொத்த மதிப்பு ஆஸ்திரேலிய டொலர்களில் கிட்டத்தட்ட 3.34 மில்லியன் ஆகும்.
குறித்த வழக்கினை விசாரித்து அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறிப்பிட்ட உதவிப் பணத்தை வழங்கமுடியாவிட்டால், எதிர்வரும் 9999 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதி வரைக்கும் இஸ்ரேலைவிட்டு வெளியேறமுடியாது என்று அறிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலில் அகப்பட்டிருக்கும் Noam Huppert, இந்த சிக்கலில் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி பொது அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலதிக தகவல்கள் அறிந்த ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, இஸ்ரேல் பெண்களை திருமணம் செய்து மணவிலக்கான பல நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இப்படியான சூழ்நிலையில் சிக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
