கொரோனா தொற்று அச்சத்தினால் மூடப்பட்டுள்ள ஆஸ்திரேலிய திரையரங்குகள் எதிர்வரும் ஜூலை மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Event Cinemas, Hoyts மற்றும் Village Roadshow உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் The National Association of Cinema Operators (NACO) இது குறித்து தெரிவித்தபோது- ஜூலை மாதம் நாடெங்கிலுமுள்ள திரையரங்குகளை மீளத்திறக்கும் சாத்தியமுள்ளபோதும் சரியான திகதிவிவரம் குறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் அடுத்தடுத்து நெருக்கமான காட்சி நேரங்கள் இருக்காது என்பதுடன் திரையரங்கினுள் பார்வையாளர்கள் அருகருகாக அமர்ந்துபார்க்கும்வகையில் ஆசனங்கள் இனிமேல் இருக்காது என்றும், மாறாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்வகையில் ஆசன ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்படும் என்றும் NACO தெரிவித்துள்ளது.
ஜூலை மற்றும் நவம்பர் மாதங்கள் வெளியாகப்போகும் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ஜேம்ஸ் பொண்ட் படங்களை வெளியிடுவதற்கு தாங்கள் ஆர்வமாக உள்ளதாக NACO தெரிவித்துள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
