சென்னை மேற்கு மாம்பலத்தை பூர்வீகமாகக்கொண்டவரும், ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவருமான வினி ராமனும் Glenn Maxwell-உம் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததுடன், இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தமும் நடந்தது.
அதன்பின்னர் கொரோனா நெருக்கடிகள் காரணமாக தள்ளிப்போன இவர்களது திருமணம் எதிர்வரும் மார்ச் 27-ம் திகதி நடைபெற உள்ளது.
வினிராமனின் திருமணத்தையொட்டி அவரது பெற்றோரால் அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த தமிழ் அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மற்றும் இணயத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகின்ற அதேநேரம் ரசிகர்கள், Glenn Maxwell- வினி ராமன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
