கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்று முறைகள் வட்டி வீதம் குறைக்கப்பட்டது நீங்கள் அறிந்த செய்தி. இந்த ஆண்டு பெப்ரவரி மாதப் பகுதியில் வட்டி வீதத்தை Reserve Bank of Australia குறைக்கும் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கூறியிருந்தார்கள். அவர்கள் எதிர்வு கூறிய படி, தற்போது வட்டி வீதம் 0.25 குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் பொருளாதார மந்த நிலை, ஆஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தேக்கம், நாட்டில் உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், நிறுவனங்களில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்காமல் இருக்கும் நிலைமை என்று பல காரணங்களைக் கூறினாலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான் இந்த வட்டி குறைப்பை அவசியமாக்கியதாக Reserve Bank of Australia வின் ஆளுநர் Philip Lowe கூறினார்.
Reserve Bank of Australia அறிவித்திருக்கும் புதிய வட்டி வீதத்தை நாட்டின் முன்னணி வங்கிகள் வீட்டுக் கடன் வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த வட்டி குறைப்பை முழுமையாக வழங்குமா என்று தெரியவில்லை. கடந்த ஆண்டு Reserve Bank of Australia வட்டி வீதத்தைக் குறைத்திருந்தாலும், வாடிக்கையாளர்களின் வட்டி வீதத்தைப் பெரும்பான்மையான வங்கிகள் குறைக்கவில்லை.
