மெல்பேர்ன் பல்கலைக்கழகம் மற்றும் Royal Melbourne மருத்துவமனை இணைந்து உருவாக்கிய Peter Doherty Institute for Infection and Immunity ஆய்வுகூடத்தில் பணிபுரியும் ஆய்வு மருத்துவர்களால் வெற்றிகரமாக இவ்வைரஸ் உருவான சீனாவிற்கு வெளியே முதல் முறையாக ஆய்வுகூடத்தில் வளர வைக்கப்பட்டுள்ளது.
Doherty Instituteன் மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு வந்த கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளியின் பரிசோதனை மாதிரியிலிருந்தே இவ்வைரசை வளர்த்துள்ளனர் மருத்துவர்கள்.
இவ்வைரசை பயன்படுத்தி antibody பரிசோதனை ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் இப்பரிசோதனையின் மூலம் எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாத கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் நோயாளர்களை துல்லியமாக பரிசோதித்து உறுதி செய்ய முடியும் என்கிறார் Doherty Instituteன் துணைத் தலைவர் Dr Mike Catton.
இக்கண்டுபிடிப்பை WHO உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்துடனும் வைரசிற்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வுகூடத்துடனும் பகிர்ந்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் இவ்வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவில் உருவாகி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Share
