SKIP TO MAIN CONTENT

இலங்கை வாகன விபத்தில் ஆஸ்திரேலிய தாய் மற்றும் மகள் பலி!

An Australian woman and her four-year-old daughter have died in a highway crash in Sri Lanka.
An Australian woman and her four-year-old daughter have died in a highway crash in Sri Lanka. Source: Colombo Page

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

இலங்கையின் தெற்கே நாகொட பிரதேசத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரேலிய பிரஜை ஒருவரும் அவரது 4 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் இரு ஆஸ்திரேலியர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 05 மணியளவில் கொட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வேன் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின் பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனில் பயணித்த 37 வயதான Colin Lewis Monica என்ற ஆஸ்திரேலிய பிரஜையும் Colin Poppy Gabriel என்ற 4 வயது மகளும் கொல்லப்பட்ட அதேநேரம் காயமடைந்த இரு ஆஸ்திரேலியர்கள்  களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் உயிரிழந்ததையும் இருவர் காயமடைந்ததையும் உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now