SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சி!!

மே 7, 2022 அன்று உச்சத்தை எட்டிய பிறகு, 2023 புதிய ஆண்டின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலிய வீட்டு மதிப்புகள் வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது என வீட்டுச்சந்தை நிலைவரங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பான Corelogic தெரிவித்துள்ளளது.

Cecil Hills, Western Sydney, Aerial Photography
Housing affordability in Sydney has become a critical issue with people being unable to afford housing even on the edges of the city. Source: Moment RF

1 min read

Published

By Selvi

Source: SBS


Skip to article content

CoreLogic இன் தினசரி வீட்டு மதிப்புக் குறியீடு 8.4 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த அக்டோபர் 2017 மற்றும் ஜூன் 2019 க்கு இடையில் ஏற்பட்ட 8.38 சதவீத வீழ்ச்சியை முறியடித்துள்ளது.

இந்த புதிய வீழ்ச்சியானது ஒன்பது மாதங்களுக்கும் குறைவான கால இடைவெளியில் ஏற்பட்டுள்ளதாக Corelogic தெரிவித்துள்ளளது.

மேலும் வீழ்ச்சிகளை எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம் என CoreLogic எச்சரித்துள்ளது.

கடந்த எட்டு மாதங்களில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மூன்று சதவீதம் உயர்த்துள்ளதனை அடுத்து வங்கிகளின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதினால் வீட்டு விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

அதிகரித்த வட்டி விகிதம் கடன் வாங்கும் திறனை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், அதிக வட்டி செலவுகள் காரணமாக வீடு வாங்குவார்களின் திட்டங்களையும் தள்ளி வைக்க காரணமானது.

சிட்னியில், வீட்டு மதிப்புகள் 13 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளன, அடுத்தபடியாக பிரிஸ்பேன் 9.7 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.ஆனால் மெல்பன் 8.5 சதவீத சரிவுடன் மற்ற தலைநகரங்களை விட சற்று சிறப்பாக செயல்படுவதாக வீட்டுச்சந்தை நிலைவரங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பான Corelogic தெரிவித்துள்ளளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now