SKIP TO MAIN CONTENT

நாடுகளுக்கிடையே உளவு ரகசியங்கள் எப்படி பகிர்ந்துகொள்ளப்படுகின்றன?

ASD Australian Signals Directorate (ADS) தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

dpa
A computer monitor displays binary code Source: DPA

4 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

Australian Signals Directorate - ASD என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. ASD அமைப்பை ‘ஆஸ்திரேலிய சமிக்ஞைகள் பணியகம்’ என்று தமிழில் சொல்லலாம். பரவலாக பலரும் அறியாத இந்த அமைப்பு என்ன செய்கிறது என்று பார்த்தால், ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக Australian Defence Force என்ற ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான intelligence -உளவுத்துறையோடு தொடர்பான தகவல்கள், cyber security- cyber பாதுகாப்பு, offensive operations -நாட்டின் மீதான தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் என்பவற்றை திரட்டி வழங்குகிறது.

இதன் பணிகள் இத்துடன் முடிவதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு உள்ளே/வெளியே இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவிப்பது; cyber தாக்குதல்கள் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பின் அவற்றை முறியடிக்க ஆலோசனை வழங்குவது; cyber தாக்குதல், தீவிரவாத தாக்குதல்கள் என்பவை தொடர்பாக உளவறிந்து அவற்றைக் களைவது; இம்மாதிரியான நடவடிக்கைகளில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈடுபட்டிருக்கும் எமது அதிகாரிகளுக்குத் தேவையானதும் மிக ரகசியமானதும் துல்லியமானதுமான intelligence ரகசியத் தகவல்களை வழங்குவது என்று மிகமிக அத்தியாவசியமான பணிகளை இந்த Australian Signals Directorate - ASD செய்கிறது.

20170811001314156699-minihighres.jpg
Credit: AAP

மிகக் கடினமான ஒரு செயல், மட்டுமல்ல முற்றிலும் செய்யமுடியாத ஒரு செயல் என்ற பணிகளுக்கு இடையேயுள்ள குறுகிய இடைவெளியில் Australian Signals Directorate - ASD மிக நுணுக்கமாக செயல்படுவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

Australian Signals Directorate இற்குக் கிடைக்கும் தகவல்கள் பெரும்பாலும் secret code என்ற மறைக்குறியீட்டிலேயே வரும் என்பதும் இந்த அமைப்பு அனுப்பும் அல்லது நட்பு நாடுகளுடன் பகிரும் தகவல்களும் இதே மறைக்குறியீட்டிலேயே இருக்கும் என்பதுதான் இந்த பணியின் மிக முக்கியமான அம்சம். இப்படி தகவல்களை மற்றவர் புரிந்துகொள்ள முடியாதவாறு மறைக்குறியீடு செய்வது encrypting அல்லது encoding என்றும் மறைக்குறியீட்டை எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய விதமாக விரிவுபடுத்துதல் decrypting அல்லது decoding என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே secret coding என்ற மறைக்குறியீட்டுடன் தொடர்பான அலுவல்களில் பெரும்பாலும் Australian Signals Directorate - ASD ஈடுபட்டிருப்பதால் அது தனது 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் Australian mint என்ற ‘ஆஸ்திரேலிய நாணய சாலை’ சிறப்பு 50 சத நாணயமொன்றை வெளியிட்டிருக்கிறது.

The coin was available for purchase from the Royal Australian Mint.
The coin was available for purchase from the Royal Australian Mint. Credit: Royal Australian Mint

இந்த சிறப்பு நாணயம் பொதுமக்களின் புழக்கத்திற்காக விநியோகிக்கப்படவில்லை. மாறாக இதை நேரடியாகப் பணம் செலுத்தி Royal Australian mint இடமிருந்து தேவையானவர்கள் இதை வாங்கவேண்டும். 50000 நாணயங்கள் மட்டுமே வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. இப்போதே eBay சந்தையில் ஒரு 50 சதநாணயம் 50/60 டாலர்களுக்கு விற்பனையாகிறது.

இந்த நாணயம் மற்ற நாணயங்களைவிட வித்தியாசமானது என்பது இதன் சிறப்பு. மற்ற 50 சத நாணயங்களோடு ஒப்பிடும்போது அளவில் மற்றும் எடையில் வித்தியாசமில்லை. இந்த நாணயங்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நாணயத்தின் மீது 4 அடுக்கு ரகசிய தகவல்கள் secret coding என்ற மறைக்குறியீட்டில் encrypt செய்யப்பட்டு, நாணயத்தின் இருபக்கங்களிலும், வார்ப்பிலேயே செதுக்கப்பட்டுள்ளன.

Royal Australian Mint
Royal Australian Mint Credit: AAP

இந்த மறைக்குறியீட்டை decrypt அதாவது விரிவாக்கம் செய்ய உதவும் clues என்ற துப்புகள் அல்லது உதவிக்குறிப்புகளும் இந்த நாணயத்திலேயே பதிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் 14 வயது மாணவர் ஒருவர் இந்த 4 அடுக்குத் தகவல்களையும் decrypt விரவாக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறைக்குறியீட்டில் உள்ள நான்கு அடுக்கு தகவல்களை விரிவாக்கம் செய்து கண்டுபிடிப்பவர்களுக்கு Australian Signals Directorate - ASD யில் ஆரம்பநிலையில் வேலையில் சேர்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என்று ASD அறிவித்திருக்கிறது.

‘மக்களை இந்த encoding என்ற மறைக்குறியீட்டுக்குள் வரவழைத்து அவர்கள் ஒரு விளையாட்டில் ஈடுபடுவதைப்போல அவர்களை உள்வாங்கிக்கொள்வது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருக்கும் என்பது மட்டுமல்ல, இதன் மூலமாக Australian Signals Directorate நிறுவனத்திற்குத் தேவையான எதிர்கால பணியாளர்களையும் இனங்கண்டு கொள்வது முக்கிய வாய்ப்பாகவும் இருக்கும்”

என்று ASD யின் Director General- பணிப்பாளர் நாயகம் Rachel Noble கூறியிருக்கிறார்.

மறைக்குறியீட்டை விரிவாக்கம் செய்வதை breaking the code என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்த encoding/decoding அல்லது encrypting/decrypting என்பது இரண்டாம் உலகப்போரின் போது போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க உதவியது.

இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியிலும் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் மறு அணியிலுமாகப் போரிட்டன.

ஜெர்மனி இந்த Enigma இயந்திரம் மூலமாக encrypting ஐ தரைப்படை, விமானப்படை மற்றும் இராஜதந்திர செய்தித் தொடர்புகளுக்கும் பயன் படுத்தியது.

ஜெர்மனி, தான் மறைக் குறியீட்டில் தனது நட்பு நாடுகளுக்கும் தமது போர்முனை தளபதிகளுக்கும் Enigma என்ற இயந்திரம் மூலமாக encrypt செய்து அனுப்பிய செய்திகளை யாராலும் விரிவாக்கிப் புரிந்துகொள்ள முடியாது என்று திடமாக நம்பியிருந்தது. ஆனால் இங்கிலாந்தில் Bletchley Park என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நிலையத்தில் இரவுபகல் என்று பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடனும், கடின உழைப்புடனும், விடாமுயற்சியுடனும் பணியாற்றிய பல அதிகாரிகள் ஜெர்மனியின் இந்த enigma ரகசிய மறைக்குறியீட்டு செய்திகளை ஜெர்மனிக்குத் தெரியாமல் தொடர்ந்து decrypt விரிவாக்கம் செய்து வந்ததால் ஜெர்மனியின் வியூகம், படைவலிமை, தாக்குதல் முனைகள் என்பவை பற்றி நன்கு அறிந்துகொண்டன. இதனாலேயே நேசநாடுகள் வெற்றிகரமான எதிர்த்தாக்குதல்களை திட்டமிட்டன என்றும் இதன் காரணமாகவே ஜெர்மனி போரில் தோற்றது என்றும் கூறப்படுகிறது.

Close up detail from the notebook of Enigma codebreaker Alan Turing
Close up detail from the notebook of Enigma codebreaker Alan Turing, that belonged to the mathematician which recently sold for £1M - and has now been loaned to Bletchley Park which played a major part in breaking codes in the Second World War Credit: Chris Radburn/PA Wire

ஜெர்மனியும் தனது எதிரிகளான பிரிட்டனுடன் இணைந்திருந்த நேச நாடுகளின் செய்திகளை விரிவாக்கம் செய்வதில் பல முறை வெற்றி கண்டது. ரஷ்ய மற்றும் டென்மார்க் Danish code களையும் ஜெர்மனி decrypt செய்து உளவறிந்தது.

எதிரிகளின் கைகளுக்கு ரகசியமான தகவல்கள் போய்ச்சேர்ந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே போர்க்காலத்தில் தகவல்கள் மற்றும் செய்திகள் encrypt செய்யப்பட்டன. இன்றைய காலகட்டத்திலும் நாட்டின் பாதுகாப்பு, நட்பு நாடுகளின் பாதுகாப்பு என்பன தொடர்பான தகவல்கள் எதிரிகளுக்கும் ஏனையோருக்கும் போய்ச்சேர்ந்துவிடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் காரணமாக இவை encrypt செய்யப்படுகின்றன.

இன்றைய கணினி யுகத்தில் தகவல்கள் பலவழிகளில் திருடப்படுகின்றன; முறைகேடாகப் பயன் படுத்தப்படுகின்றன. ஆகவே முன்னரைவிட இப்போது encryption அல்லது மறைக்குறியீடு செய்வது மிக அவசியமாகிறது.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now