Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பாலியல் குறுஞ்செய்தி சர்ச்சை: ஆஸி. Test cricket captain பதவி விலகல்!

Tim Paine
Tim Paine announces his resignation as Australian Test cricket captain at a press conference at Bellerive Oval in Hobart, Tasmania, on Friday. Source: AAP

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் Captain Tim Paine இப்பதவியிலிருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார்.

கடந்த 2017ம் ஆண்டு டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பின் சக பெண் ஊழியர் ஒருவருக்கு அனுப்பிய பாலியல் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையானதையடுத்து இவரது பதவிவிலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tim Paine தனக்கு இவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக, குறித்த பெண், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், டாஸ்மானிய கிரிக்கெட் அமைப்பு ஆகியவற்றில் 2017-ம் ஆண்டு புகார் செய்தபோதும், Tim Paine எவ்வித விதிமீறலிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தப்பின்னணியில் Tim Paine அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

2017ம் ஆண்டு அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள், ஆஸ்திரேலிய Test Captain-ஆக இருப்பதற்கு தன்னைத் தகுதியற்றவர் ஆக்குவதால், தான் பதவிவிலகுவதாக இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் Tim Paine தெரிவித்தார்.

தன்னுடைய கடந்தகால செயற்பாட்டிற்காக ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் மன்னிப்புக்கோருவதாகவும் Tim Paine குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் புதிய Test Captain-ஆக வேகப்பந்துவீச்சாளர் Pat Cummins நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


2 min read

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now