2021-இல் ஆஸ்திரேலிய விசாக்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எவை?

Visa changes

Source: SBS

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் ஆஸ்திரேலிய விசாக்கள் தொடர்பில் சில முக்கியமான சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

1.புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக குடியேற வருகின்ற மக்களின் எண்ணிக்கை 2020-2021ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சுமார் 72000 குறைகிறது. ஆனால் குடியேறிய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் அம்சமாக Family reunion stream-க்கான விசா இடங்கள் 47,732 இலிருந்து 77,300 ஆக அதிகரிக்கப்படுகிறது.

2. Global Talent Independent program, Business Innovation and Investment Program மற்றும்  Employer-Sponsored விசாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அத்துடன் Global Talent Independent program-க்கான இடங்கள் 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும் அதேநேரம் Business Innovation and Investment Program -க்கான இடங்கள் 13,500 ஆக அதிகரிக்கப்படுகிறது.

3. ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடுகளை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து Skilled visa nomination திட்டம் விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. கொரோனா பரவல் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆஸ்திரேலிய விசாக்களுக்கான நிபந்தனைகளில் தளர்வுகள் அல்லது சலுகைகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி

  • Partner (subclass 309) visa
  • Prospective Marriage (subclass 300) visa
  • Child (subclass 101) visa
  • Adoption (subclass 102) visa
  • Dependent Child (subclass 445) visa
போன்ற விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்கள் அந்த விசா வழங்கப்படும்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கவேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வுகொண்டுவரப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்தவாறே அவர்கள் இந்த விசாக்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

5. ஆஸ்திரேலியாவிலுள்ள தமது துணையுடன் இணைவதற்காக Partner visa  ஊடாக வருபவர்களும் அவர்களை ஸ்பொன்சர் செய்யும் மணத்துணையும் தமது ஆங்கிலமொழிப்புலமையை நிரூபிக்க வேண்டுமெனன்ற சட்டம் இவ்வாண்டு நடைமுறைக்கு வருகிறது.

Partner visa விண்ணப்பதாரிகள் ஆங்கிலப்பரீட்சையை சித்தியடைந்தால்தான் விசா வழங்கப்படும் என்றில்லை. அவர்கள் ஆங்கிலத்தை பயில்வதில் ஆர்வத்துடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை நிரூபித்தால்- உதாரணமாக Adult Migration English Program போன்ற செயற்றிட்டமூடாக 500 மணித்தியால வகுப்பில் கலந்துகொள்கின்றமை போன்ற விடயங்களை உறுதிசெய்துகொண்டாலே போதும் என தெரிவிக்கப்படுகிறது. இச்சட்டம் இந்த ஆண்டு இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. வெளிநாட்டிலுள்ள தனது துணையை ஆஸ்திரேலியாவுக்கு ஸ்பொன்சர் செய்பவரின் நடத்தை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர் தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்பட்சத்தில் மாத்திரமே sponsorship approval வழங்கப்படும்.

குடும்ப வன்முறை, பாலியல் முறைகேடு, சிறுவர்கள் மீதான பாலியல் முறைகேடு மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடையதாக ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் அவரது sponsorship விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதில் சிக்கல்கள் எழலாம். இது 2021 இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. வர்த்தக மற்றும் முதலீடு தொடர்பிலான பிரதான விசா பிரிவுகளின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து நான்காக குறைக்கப்படுகிறது(Business Innovation, Entrepreneur, Investor and Significant Investor)

8. ஆஸ்திரேலியாவிற்குள் மாணவர் விசா உட்பட தற்காலிக விசாவுடன் வரும் ஒருவர் 'high-risk biosecurity goods' எனப்படும் உயிர்ப்பாதுகாப்புக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை பயணப்பத்திரத்தில் பிரகடனம் (declare) செய்யாமல் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி ஆஸ்திரேலியாவுக்குள் எடுத்துவர முற்பட்டால், அவரது விசா ரத்துச்செய்யப்பட்டு நாடுகடத்தப்படும்வகையிலான சட்டமாற்றம் ஜனவரி 1 முதல் கொண்டுவரப்பட்டுள்ளது.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
2021-இல் ஆஸ்திரேலிய விசாக்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எவை? | SBS Tamil