ஆஸ்திரேலிய visitor விசாவுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவுக்கான visitor விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், முன்னைய நாட்களுடன் ஒப்பிடுகையில், 3 மடங்கு அதிக காலம் காத்திருக்கவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Visa label

Source: AAP

குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா நாட்டவர்கள் தமக்கான விசாவைப் பெற்றுக்கொள்வதில் நீண்ட தாமதத்தை எதிர்கொள்வதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

1 நவம்பர் 2021 அன்று ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, visitor விசாக்கள் பற்றிய உள்துறை அமைச்சின் அறிக்கை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் business visitors எண்ணிக்கையிலும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டுகிறது.

உள்துறை அமைச்சினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2022 வரையிலான காலப்பகுதியில் visitor விசா விண்ணப்ப பரிசீலனைக்கு எவ்வளவு நாட்கள் எடுத்தன என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022-11-03_10-34-52.jpg
Around 75 per cent of tourist visas were processed in 59 calendar days. Credit: SBS News
இதன்படி சுற்றுலா விசாக்களுக்கான 75 சதவீத விண்ணப்பங்கள் (subclass 600 மற்றும் 676) 59 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டன. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 269 சதவீதம் அதிகமாகும்.

வணிக விசாக்களுக்கான பரிசீலனைக்காலம் (short stay, subclass 456) மற்றும் (business visitor, subclass 600) 15 நாட்களாக அதிகாரித்திருந்தது. கோவிட் பரவலுக்கு முன்பு இது 7 நாட்களாக காணப்பட்டது.

முன்னைய காலத்துடன் ஒப்பிடும்போது, குறிப்பிட்ட காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதிலும், பரிசீலனைக் காலம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் இடையே சுமார் 1.3 மில்லியன் visitor விசா விண்ணப்பங்கள் (சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள் உட்பட) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 695,343 ஆக காணப்பட்டது.

இந்த அறிக்கை ஏப்ரல்-ஜூன் வரையிலான தரவுகளை உள்ளடக்கியது. அதாவது மே 21 அன்று லேபர் அரசு தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முந்தைய காலகட்டத்தையும் உள்ளடக்கியது.

தேங்கிக்கிடந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யவேண்டியிருந்ததால், இதற்கு சிறிது நேரம் எடுப்பதாக உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் SBS Newsக்கு தெரிவித்தார்.

விசா பரிசீலனையை விரைவுபடுத்தும்வகையில் திணைக்களம் கொள்கை மாற்றங்களைச் செயல்படுத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

1.5 மில்லியனுக்கும் அதிகமான visitor விசா, 199,000 மாணவர் விசா மற்றும் 43,000 temporary skilled விண்ணப்பங்கள் உட்பட கிட்டத்தட்ட 2.8 மில்லியன் temporary மற்றும் migration விசாக்கள் ஜூன் 1 முதல் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

விசாவுக்கான காத்திருப்பு காலத்தை நிவர்த்தி செய்யும் வகையில், ஒன்பது மாதங்களுக்கு 500 பேரை வேலைக்கு அமர்த்த லேபர் அரசு $36.1 மில்லியன் கூடுதல் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதில் 20 சதவீத பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்பட்டுள்ளன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
ஆஸ்திரேலிய visitor விசாவுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக அதிகரிப்பு | SBS Tamil