ஒரு சராசரி பீர் (schooner of beer) குடிப்பதற்கு $12 வரை செலவாகலாம்.
ஆஸ்திரேலிய வரித்துறை பீர் மீது விதிக்கும் வரி, அடுத்த மாதம் (பெப்ரவரி ஓராம் தேதி) முதல் 3.7 சதவீதத்தால் அதிகரிக்கிறது. இதனால், பீர் மதுபானத்தின் விலை அதிகரிக்கப் போகிறது.
மதுக்கடைகளில் வாங்கினால் என்ன, அல்லது க்ளப் (club) பார் (bar) போன்ற இடங்களில் உடனே குடிப்பதற்கு வாங்கினால் என்ன, இந்த விலை உயர்வைக் குடிமக்கள் தவிர்க்க முடியாது.
பீர் குடிப்பதற்கு ஜப்பான், ஃபின்லாந்து மற்றும் நோர்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில்தான் மிக அதிக வரியினை மக்கள் செலுத்துகிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.