SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்து அறிமுகப்படுத்தும் சுற்றுலாப்பயணிகளுக்கான வரியிலிருந்து ஆஸ்திரேலியர்களுக்கு விலக்கு!

Australians have been exempted from paying New Zealand's entry tax.
Australians have been exempted from paying New Zealand's entry tax. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளநிலையில் ஆஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து NZ$25 - NZ$35 வரையிலான தொகையை வரியாக அறவிட நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் Pacific Islands Forum நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

இவ்வாண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் வரை 3.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், 4.7 மில்லியன் சனத்தொகை கொண்ட நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள அதேநேரம் இதில் 1.5மில்லியன் பேர் ஆஸ்திரேலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now