நாட்டில் அத்தியாவசிய துறைகளில் பணிபுரிபவர்கள் சிறுவர் பராமரிப்பு வசதியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளையடுத்து பல உதவித்திட்டங்களை அரசு அறிவித்துவரும் நிலையில் அத்தியாவசிய துறைகளில் தொடர்ந்தும் பணிபுரியவேண்டியுள்ளவர்களுக்கு உதவியாக இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 13 ஆயிரம் சிறுவர் பராமரிப்பு மையங்களுக்குத் தேவையான அரச உதவிகள் வழங்கப்பட்டு அவை தொடர்ந்தும் தடையின்றி இயங்கும்வகையில் பார்த்துக்கொள்ளப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
இவ்வுதவி ஏப்ரல் 6ம் திகதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
Share
