SKIP TO MAIN CONTENT

வீடுகளில் முதலீடு செய்ய ஆபத்தான இடங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆண்டுகளில் 66 புறநகரங்களில் வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் பாரிய அளவில் வீழ்ச்சியடைய உள்ளதாகவும் அவைகள் வீட்டு சந்தை முதலீட்டிற்கு ஆபத்தான பகுதிகள் என வீட்டு முதலீட்டு ஆய்வு நிறுவனமான Hotspottingன் சமீபத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது

House Property
Is now a good time to buy or sell a property? Source: News Corp Australia

1 min read

Published

Updated

By Selvi



Skip to article content

N.S.Wல் 17, விக்டோரியாவில் 7, குயின்ஸ்லாந்தில் 26, மேற்கு ஆஸ்திரேலியாவில் 3, டஸ்மேனியாவில் 3, Northern Territoryல் 10 புறநகரங்கள் முதலீட்டிற்கு ஆபத்தான புறநகரங்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACTயில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

சிட்னி நகரம், பரமட்டா புறநகர், பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்ன் உட்புறநகரங்கள் மற்றும் குயின்ஸ்லாந்தில் உள்ள பிராந்திய பகுதிகளான Mount Isa மற்றும் Gladstone ஆகிய பகுதிகள், வீட்டு முதலீட்டிற்கு மிகவும் ஆபத்தான பகுதிகள் என்றும் ஆகவே இப்பகுதிகளில் வீடுகள் வாங்குவதை தற்போது தவிர்ப்பது நல்லது என்றும் Hotspotting நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Terry Ryder கூறியுள்ளார். 

அடிலெயிட் மற்றும் கான்பரா, வீட்டு முதலீட்டிற்கு ஏற்ற இடங்கள் என்றும் முதலீட்டிற்கு ஆபத்தான இடங்கள் என அவைகள் கண்டறியப்படவில்லை எனவும் Terry Ryder மேலும் கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now