கொரோனா வைரஸ் COVID- 19 தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை எட்டியது.
சிட்னி Newmarch முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 93 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்த நூறாவது நபராவார்.
குறித்த மூதாட்டி இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Newmarch முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட COVID- 19 தொற்று காரணமாக அங்கு இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
