ஆஸ்திரேலியாவின் முதல் coronavirus நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!

People wearing face masks arrive at Heathrow Airport in London. Internationally, airports are setting up screening processes to catch the deadly virus.

People wearing face masks arrive at Heathrow Airport in London. Internationally, airports are setting up screening processes to catch the deadly virus. Source: EPA

ஆஸ்திரேலியாவில் Coronavirus தொற்றுக்குள்ளான முதல் நபர் விக்டோரியாவில் இனங்காணப்பட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி சீனாவின் Wuhan பகுதியிலிருந்து வந்த சீன நபர் இவ்வாறு Coronavirus தொற்றுக்குள்ளானமை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக விக்டோரிய சுகாதார அமைச்சர் Jenny Mikakos தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் இந்நோய்த்தொற்று குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபர் பயணம் செய்த விமானத்தில் வந்த அனைத்துப் பயணிகளுக்கும் தத்தம் உடல்நலம் குறித்தும் நோய் அறிகுறிகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன் பெருமளவில் பரவி பாதிப்பை உண்டாக்கிய sarsvirus குடும்பத்தைச் சேர்ந்த இந்த coronavirus , சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவில் Coronavirus தொற்றினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 41 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand