SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வைத்தியர்களின் வருடாந்த சராசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிகூடிய சம்பளம் பெறுவோர் யார் தெரியுமா? இங்கு எந்தெந்தத் தொழில்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்று எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா?

cc
Source: loandesk

1 min read

Published

By Praba Maheswaran



Skip to article content

ஆஸ்திரேலிய வரித்திணைக்களம், 2015/16ம் நிதியாண்டில் அதிக சம்பளம் பெற்ற தொழிற்துறைகளை, செலுத்தப்பட்ட வரியின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் மிக அதிக வருமானம் பெற்ற முதல் பத்து தொழில்துறைகளின் பட்டியலில் surgeons - அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். அவர்களின் அவ்வருடத்துக்குரிய சராசரி வருமானம் $393,467 ஆக இருந்துள்ளது. இரண்டாமிடத்தில் anaesthetist - மயக்கமருந்து நிபுணர்கள், அவர்களின் சராசரி வருமானம் $359,056 ஆகும்.

முதல் 10 தொழில்துறைகளில் முதல் ஆறு அதிகூடிய வருமானங்களை பெறுபவர்கள் Surgeons, anaesthetists and internal medicine specialists உட்பட வைத்திய துறைகளில் உள்ளோர்களாகும். சாதாரண வைத்தியர்கள் அல்லது GP யினுடைய சராசரி வருமானம் $200,000 ஆகும்.

cc
Source: ATO

வைத்தியத்துறை தவிர்ந்த CEOs, managers, financial dealers and psychiatrists ஆகிய தொழில்துறைகளும் முதல் 10 இடங்களுக்குள் அமைகின்றன.

தேசிய ரீதியில் மேற்குறிப்பிட்ட தொழிற்துறையில் முதல் 10 இடங்களுக்குள் அமைந்தாலும், மாநில ரீதியில் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக நாடளாவிய ரீதியில் mining engineers - சுரங்க பொறியியலாளர்கள் முதல் பத்தினுள் வந்தாலும் NSW, VIC மாநில பட்டியலில் அது இடம்பெறவில்லை. அத்துடன் VIC மாநிலப் பட்டியலில் 10வது இடத்தில் air traffic controllers - விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ள அதேவேளை NSW ன் 10வது இடத்தில் இருப்பவர்கள் mathematicians - கணிதவியலாளர்கள் ஆகும்.

மேலதிக விவரங்களுக்கு: https://www.ato.gov.au/about-ato/research-and-statistics/in-detail/taxation-statistics/taxation-statistics-2015-16/?anchor=Individuals#Individuals


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now