குடிவரவு தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமையளிக்காமல் விட்டதாக முன்னாள் அரசை விமர்சித்த ஆஸ்திரேலியாவின் புதிய குடிவரவு அமைச்சர் Andrew Giles, விசா விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் மெல்பனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது SBS ஹிந்தியிடம் கருத்துத்தெரிவித்த குடிவரவு, குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Andrew Giles, தமது அரசு தேங்கிக்கிடக்கும் விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் முற்றிலும் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கு காத்திருக்கும் காலப்பகுதியையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் Andrew Giles, குடியுரிமையைப் பெறுவதற்காக பல ஆண்டுகளாக பலர் காத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
இதேவேளை பெற்றோர் விசாக்களுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் நிலமையையும் தான் புரிந்துகொள்வதாகக் கூறிய அமைச்சர், புதிய அரசு பெற்றோர் விசாக்களை விரைவுபடுத்துவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தனது தேர்தல் தொகுதியில் உள்ள மக்கள் உட்பட இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்திற்கு பெரும் கவலையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மெல்பனின் வடக்கு suburb-களான Epping, Thomastown, Bundoora, Lalor, Mill Park மற்றும் South Morang போன்றவற்றை உள்ளடக்கிய Scullin தேர்தல் பிரிவை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் - இவை அனைத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
இதுஇவ்வாறிருக்க விசா விண்ணப்பங்கள் பாரியளவில் தேங்கியமைக்குக் காரணம் கொரோனா பரவல் எனவும், புதிய அரசு விரைவாக செயல்பட்டு அவற்றின் பரிசீலனையை விரைவுபடுத்த வேண்டும் எனவும் முன்னாள் குடிவரவு அமைச்சர் Dan Tehan வலியுறுத்தியுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.