ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தற்காலிக விசாவில் உள்ளவர்களை எந்தளவு தூரம் பாதித்துள்ளது என்பது Unions NSW மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் ஐயாயிரம் தற்காலிக விசாவுடையவர்களின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இதில் பங்கேற்றவர்களில் 65 வீதமானவர்கள் தொழில்களை இழந்துள்ளார்கள்(60 வீதமானவர்கள் வெளிநாட்டு மாணவர்கள்). 34 வீதமானவர்கள் வீடற்றவர்களாக அல்லது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
இவர்களில் 39 சதவீதமானவர்கள் அன்றாட வாழ்க்கைச்செலவுகளுக்குரிய பணமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 23 சதவீதமானவர்கள் வாடகையை குறைப்பதற்காக படுக்கை அறையை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதவிர குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 43 வீதமானவர்கள், போதிய பணமில்லாததால் உணவு உட்கொள்வதைக்கூட குறைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிதரும் தகவலும் வெளியாகியுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
