ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், இந்தச்சிறைச்சாலைக்கு கைதிகளை இடமாற்றும் பணி வரும் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Lavadia என்ற இடத்தில் 70 கோடி டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் சுமார் ஆயிரத்து 700 கைதிகளை தடுத்துவைக்க முடியும்.
இங்கு முந்நூறு பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் பலரை பணிக்கு அமர்த்தும் வேலைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆயிரத்து 650 கண்காணிப்பு கமராக்களுடன் உயர்தொழில்நுட்ப பாதுகாப்பு வசதிகள் நிறைந்த தடுப்புக்காவல் நிலையமாக இந்த சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையைச் சூழவுள்ள பிராந்தியத்தின் பொருளாதாரத்துக்கு அடுத்த 20 வருடங்களுக்கு 50 கோடி டொலர்கள் வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
