இதன்படி எதிர்வரும் ஜுலை 1 முதல் நாடுமுழுவதுமுள்ள 180,000 பணியாளர்கள் வாரமொன்றுக்கு 40 டொலர்கள் கூடுதலாகப் பெறவுள்ளனர்.
இதுவரை காலமும் முழுநேர பணியாளர் ஒருவருக்கு மணித்தியாலமொன்றுக்கு வழங்கவேண்டிய ஆகக்குறைந்த சம்பளமாக $20.33 டொலர்கள் காணப்பட்ட நிலையில் அது தற்போது $21.38 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் ஆகக்குறைந்த வாராந்த சம்பளம் $812.60 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு 5.5 வீத ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த அதேநேரம் இதற்கு மறுப்புத் தெரிவித்த வர்த்தக அமைப்புக்கள் 2.5 வீத அதிகரிப்பே வழங்க முடியுமென வாதிட்டுவந்தன.
இந்தநிலையில் தனது வருடாந்த மீளாய்வினை மேற்கொண்ட Fair Work Commission வாரமொன்றுக்கு 40 டொலர்களால் சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்த ஊதிய அதிகரிப்பு தொடர்பில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக Australian Council of Trade Unions செயலாளர் Sally McManus குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முடிவை முற்றிலும் வரவேற்பதாக Anthony Albanese தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு வணிகங்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்று ஆஸ்திரேலிய வர்த்தக சம்மேளனம் எச்சரித்துள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.