சென்னையில் ஆஸ்திரேலியாவின் புதிய துணைத்தூதராக Sarah Kirlew நியமிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne அறிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வரும் தென்னிந்தியா, வணிகத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நல்ல முறையில் வளர்ந்து வரும் உறுதியான, பாதுகாப்பான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் புதிய துணைத்தூதர் முனைப்புடன் செயற்படுவார் எனவும் அமைச்சர் Marise Payne குறிப்பிட்டார்.
அதேநேரம் சென்னையிலுள்ள தமது துணை தூதரகம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்டவற்றில் ஆஸ்திரேலியாவின் மூலோபாய, வர்த்தக மற்றும் முதலீட்டு நலன்களைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை நிலைநாட்டுவதில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அமைச்சர் Marise Payne கூறினார்.
வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தொழில்துறை சார்ந்த அதிகாரியான Sarah Kirlew, முன்பு பெய்ஜிங், புது தில்லி மற்றும் கெய்ரோவில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
