உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.
QS World University Rankings 2021 தரப்படுத்தலிலேயே 7 ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன.
இத்தரப்படுத்தலின்படி Australian National University சர்வதேச அளவில் 31-வது இடத்தையும் ஆஸ்திரேலிய அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
இதுதவிர University of Sydney 40வது இடத்தையும், University of Melbourne 41வது இடத்தையும், University of New South Wales 44வது இடத்தையும், University of Queensland 46வது இடத்தையும், Monash University 55வது இடத்தையும், University of Western Australia 92வது இடத்தையும் பிடித்துள்ளன.
குறித்த தரவரிசையின்படி ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, academic reputation, international faculty, citations per faculty ratio ஆகியவற்றின் அடிப்படையில் இத்தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Source: QS World University Rankings 2021
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலையடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளபோதிலும், அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கு அரசு ஆலோசித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
