SKIP TO MAIN CONTENT

மெல்பனில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம்!

மெல்பனில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம்!

Air Asia
File Photo Source: AAP

1 min read

Published

Updated

By Raymond Selvaraj

Source: Sydney Morning Herald



Skip to article content

மெல்பன் பெருநகரின் Geelong நகரின் Avalon விமான நிலையம் தற்போது உள்ளூர் விமான நிலையமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas நிறுவனத்தின் Jetstar மட்டுமே Avalon விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறது.  ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் மலேசிய நிறுவனமான Air Asia விமான நிறுவனம் Avalon விமான நிலையத்திலிருந்து தனது சார்வதேச விமான சேவைகளை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விமான நிலையத்தை சுமார் ஐந்து லட்சம் பயணிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இன்னும் பத்து ஆண்டுகளில் Avalon விமான நிலையத்தை சுமார் எழுபது லட்சம் பயணிகள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Avalon விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உயர்த்தப்படுவது தொடர்பாக விமான நிலையத்தில் மேலும் விமான ஓடுபாதைகளை அமைக்கவும், மேலும் பல புதிய வசதிகளை செய்யவும், குடிவரவுத்துறை  அதிகாரிகள் அங்கு அலுவலகம் அமைக்கவும் என்று பல்வேறு பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் ஞாயிறு Avalon விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் Julie Bishop அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.           


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now