SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அதிகளவானோருக்கு வைக்கப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

Prince Louis and Princess Charlotte.
Prince Louis and Princess Charlotte. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

ஆஸ்திரேலிய மக்கள் புதிதாக பிறக்கும் தமது பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களில் பிரிட்டிஷ் அரச குடும்பத்து வாரிசுகளின் பெயர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு என்னென்ன பெயர்கள் அதிகளவு சூட்டப்பட்டிருக்கின்றன என்ற விபரங்களை அம்மாநில பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 2017ம் ஆண்டு பிறந்த பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு பிரிட்டிஷ் குட்டி இளவரசி Charlotte-இன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு Olivia என்ற பெயர் முதலிடம் பெற்றிருந்த நிலையில் இப்பெயர் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆண்குழந்தைகளுக்கான பெயர்களில் Oliver தொடர்ந்து 4வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் William, Noah Jack ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

ஏனைய மாநிலங்களிலும் Charlotte, William, Henry, George போன்ற பெயர்களே அதிக ஆதிக்கம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SBS
Source: SBS

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now