SKIP TO MAIN CONTENT

ஆண் சுறா இல்லாமல் பிறந்த சுறா குட்டி அதிசயம்

பல வருடங்களாக, பெண் சுறாக்கள் மட்டுமே வாழும் தொட்டியில் அதிசயமாக ஒரு சுறா குட்டி பிறந்துள்ளது பலரது ஆச்சர்யத்தையும் கிளப்பியுள்ளது.

A  baby smooth dogfish (Mustelus canis).
A baby smooth dogfish (Mustelus canis). Source: AAP

1 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

இத்தாலி நாட்டின் Sardinia என்ற இடத்திலுள்ள நீர் வாழ் காட்சி சாலை (Aquarium) - Acquario Cala Gonone.  அங்கே, கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தொட்டியில் இரண்டு பெண் சுறா மீன்கள் மட்டுமே இருந்தன.

சில தினங்களுக்கு முன்பாக, அந்தத் தொட்டியில், ஒரு குட்டி சுறா பிறந்துள்ளது.

ஆண் சுறா இல்லாமல் இந்த குட்டி பிறந்திருப்பது

பல்வேறு மட்டங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ispera என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சுறா குட்டி parthenogenesis என்ற முறையில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  உடலுறவு அற்ற இனப்பெருக்கம் என்று சுருக்கமாகக் கூறப்படும் parthenogenesis பிறப்புகள் இரு பெண் உயிரினங்களின் முட்டைகளில் இருந்து உருவாகின்றன.  ஒரு விந்து மூலம் கருவுறாமல், ஒரு முட்டை கருவாக மாறும் பாலின இனப்பெருக்கம் என்றும் கூறலாம்.  இந்தக் குட்டி சுறா தாய் சுறாவின் ஒரு நகலி (clone) என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.  முதிர்ச்சியடையாத முட்டைகள் கிட்டத்தட்ட விந்தணுவைப்போல செயல்படுவதால் இந்த வகை இனப்பெருக்கம் ஏற்படுகிறது.

Covid காலத்தில் பிறந்த சுறாவுக்கு,

Sardinia மொழியில் நம்பிக்கை மற்றும் பிறப்பு

என்று பொருள்பட Ispera என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Baby Shark Ispera
Baby Shark Ispera Source: Acquario Cala Gonone

நடந்தது இது தானா?

நடந்தது இது தானா என்பதை உறுதி செய்வதற்காக, நீர் வாழ் காட்சி சாலை கடல் உயிரியல் அறிஞர்கள் சுறாவின் DNA சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

புழுக்கள், பூச்சிகள் போன்ற முதுகெலும்பில்லாத உயிரினங்களில், parthenogenesis பிறப்பு ஒப்பீட்டளவில் பொதுவானது.  தவளை போன்று நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்கள், பல்லிகள் மற்றும் மீன் உள்ளிட்ட முதுகெலும்புள்ள உயிரினங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

Hammerhead Shark
Hammerhead Shark Source: AAP/Mary Evans/Ardea/Douglas David Seifert

சில சுறா இனங்களில் நகலி மூலம் பிறப்பு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  bonnethead, blacktip மற்றும் zebra வகை சுறாக்களில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  Isperaவின் பிறப்பும் உறுதி செய்யப்பட்டால், இந்தப் பட்டியலில் நான்காவது இனமாக smooth-hound வகை சுறாவும் சேர்க்கப்படலாம்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now