பொது இடமொன்றில் முகக்கவசம் அணியாத குற்றத்திற்காக நாட்டின் துணைப்பிரதமரும் National கட்சியின் தலைவருமான Barnaby Joyce-க்கு 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Armidale என்ற இடத்தில், வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பியபின் பணம்செலுத்துவதற்காகச் சென்ற Barnaby Joyce, முகக்கவசம் அணியாதிருந்ததை அவதானித்த பொதுமகன் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது சுகாதார அறிவுறுத்தல்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துணைப்பிரதமர் Barnaby Joyce உட்பட சுமார் 54 பேருக்கு நேற்றையதினம் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக State Emergency Operations Controller துணை ஆணையர் Gary Worboys தெரிவித்தார்.
துணைப்பிரதமராகவும் National கட்சியின் தலைவராகவும் Barnaby Joyce பொறுப்பேற்று ஒரு வாரமே ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


