SKIP TO MAIN CONTENT

ஆண்குழந்தைக்கு தந்தையானார் Barnaby Joyce!

Barnaby Joyce's partner Vikki Campion has given birth to their child.
Barnaby Joyce and partner Vikki Campion. Source: AAP

1 min read

Published

Presented by Renuka



Skip to article content

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் நஷனல் கட்சித் தலைவருமான Barnaby Joyce மற்றும் அவரது துணை Vikki Campion ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தனது முன்னாள் ஊடக ஆலோசகரான Vikki Campion-உடன் உறவில் இருப்பதாக வெளியான செய்தி, பாரிய சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, Barnaby Joyce தனது துணைப்பிரதமர் பதவியிலிருந்தும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகியிருந்தார்.

அத்துடன் Vikki Campion-க்கும் தனக்கும் இடையில் உறவு இருப்பதையும், தாம் ஒரு குழந்தையை எதிர்நோக்கியிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இவர்களுக்கு Armidale பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், இதற்கு செபஸ்டியன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் Barnaby Joyce-இன் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

செபஸ்டியன் 51 வயதான Barnaby Joyce-க்கு 5வது குழந்தையாக காணப்படும் அதேநேரம் Vikki Campion-க்கு முதற்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now