SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய ஆப்பிள்களின் தலைநகருக்குள் நுழையும் காட்டுத்தீ!

Batlow.com
Source: Batlow.com.au

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலிய ஆப்பிள்களின் தலைநகரம் என்றழைக்கப்படும் Batlow பிரதேசத்தை இன்று அல்லது நாளை காட்டுத்தீ தாக்கியழிக்கக்கூடும் என தீயணைப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

தீயின் வேகத்துக்கு ஈடுகொடுத்து Batlow பிரதேசத்தை  தங்களால் பாதுகாக்க முடியாது என்றும் அப்பகுதி மக்கள் அனைவரையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படியும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென் மேற்கு பகுதியிலுள்ள Batlow ஆப்பிள்களுக்கு பிரசித்திபெற்ற இடமாகும்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு விளையும் ஆப்பிள்கள் ஆஸ்திரேலிய பொருளதாரத்திற்கு பெரும் பங்களித்தவை. ஆஸ்திரேலிய ஆப்பிள்களின் பத்து சத வீதமானவை இங்கு உற்பத்தி செய்யப்படுவதாக  தெரிவிக்கப்படுகிறது. 

சுமார் 1300 பேரளவில் மக்கள் தொகை கொண்ட Batlow, மிகக்கடுமையாக இம்முறை காட்டுத்தீயினால் பாதிக்கப்படுவது குறித்து பெரும் அதிர்ச்சியும் கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now