Scam! எச்சரிக்கை! எமாற்றுவோர் உங்களுக்கு மிக அருகில்!

Scam அல்லது ஏமாற்றுதல் அல்லது மோசடி என்று பல வார்த்தைகளில் குறிப்பிடலாம். இதில் மாட்டிகொண்டு ஏமாந்தவர்கள் பலர். எனவே Scam இல் சிக்கிக் கொண்டு ஏமாந்து விடாதீர்கள் என்று பொதுமக்களும் எச்சரிக்கப்படுகிறர்கள்.

Phone Scam, fraud or phishing concept.

Unknown caller show on mobile phone screen. Source: iStockphoto / B4LLS/Getty Images/iStockphoto

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு (2021) மட்டுமே சுமார் 2 பில்லியன் டாலர்களை மக்கள் விதவிதமான மோசடிகளில் இழந்துள்ளனர். மட்டுமல்ல, கடந்த ஆறு மாதங்களில் மக்கள் குறைந்தது 300 மில்லியன் டாலர் இந்த மோசடிக் கும்பல்களிடம் இழந்துள்ளனர். ஆனாலும் இந்த scam பற்றியோ அல்லது அது எப்படி நம்மை குறிவைக்கிறது என்பது குறித்தோ பலருக்கும் புரிவதில்லை.

‘ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்’ என்று பொதுவாக்க் கூறப்படுவதுண்டு. கிராமத்துச் சந்தைகளிலே பிரதானமாக ஆடு மாடுகள் விற்பனையாகும் சந்தைகளில், காலையில் மற்றவர்கள் கடைவிரிக்கும் போது ஏமாற்றுக்கார்ர்களும் கடைவிரித்துவிடுவார்கள். இவர்களிடம் விற்க ஒன்றுமே இருக்காது; கடையும் இருக்காது. இல்லாத ஆட்டை ஏமாந்தவர்களுக்கு விற்று இவர்கள் காசு பார்த்துவிடுவார்கள். வாய் ஜாலமே மூலதனம். ஏமாந்தவர்கள் பணத்தை இழப்பதோடு பெருத்த மன உளைச்சலுக்கும் உள்ளாவார்கள்.

இது கிராமத்து சந்தைகளோடு நின்றுவிடுவதில்லை. இல்லாத ஒரு பொருளை அல்லது வழங்கப்படமுடியாத சேவை ஒன்றை வழங்குவதாக ஆசைகாட்டி பணம் பறிப்பது எல்லா நாடுகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது இன்றைய கணினி உலகில் அடுத்தகட்டத்திற்கு சென்றிருக்கிறது.

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் ஏமாற்றுதல் அல்லது ஏய்த்தலை scam என்று சொல்கிறார்கள். Scam என்ற ஏமாற்று வேலைகள் மொபைல் தொலைபேசி வழியாகவும், இணைய தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல்கள் வழியாகவும் நடந்துவருகின்றன. இங்கு ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் இந்த scam களில் சிக்கி கடந்த ஆண்டு மட்டும் 2 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறார்கள். எத்தனை வகையான scam கள் என்று பட்டியலிட முடியாத வகையில் ஏமாற்றுதல் நடந்துகொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் பல வகையான scamகள் மோசடிகளில் முக்கியமானது - ஒருவரது அந்தரங்க தகவல்கள் அல்லது படங்களை கணினி மூலம் hack செய்துவிட்டு பணம் தராவிட்டால் இவற்றைப் பகிரங்கப்படுத்தப் போவதாக பயமுறுத்துவது.

ஆஸ்திரேலியாவில் பல வகையான scamகள் மோசடிகள் நடந்துவருகின்றன. அவற்றில் ஓன்று Extortion scam. இது மிகப் பிரதானமான ஒன்று. இது காலங்காலமாக நமக்குத் தெரிந்த blackmail என்பதைப் போன்றது. ஒருவரது அந்தரங்க தகவல்கள் அல்லது படங்கள் என்பவற்றை கணினிகளை hack செய்வதன் மூலம் அல்லது வேறு வழிகளில் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட தொகை பணம் தராவிட்டால் இவற்றைப் பகிரங்கப் படுத்தப் போவதாக பயமுறுத்துவது.

இதைத்தவிரவும் Centrelink, Services Australia மற்றும் Department of Home Affairs அதிகாரிகள் போல தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒருவர் overdue payment பாக்கிப்பணம் செலுத்தவேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை க் கட்டாவிட்டால் கைது செய்யப்படுவார் என்று விடுக்கும் அச்சுறுத்துதலும் அடங்கும். இந்த extortion scam இல் பல விதமான extortion scamகள் உலவுகின்றன.

Computer hacker stealing data from a laptop
Computer hacker stealing data from a laptop concept for network security, identity theft and computer crime Source: iStockphoto / BrianAJackson/Getty Images/iStockphoto

இதற்கு அடுத்தபடியாக Investment Scam என்பது மிகப்பிரபலமான ஒன்று.

உங்கள் செல்வத்தை அல்லது சொத்துக்களைப் பெருக்கிக்கொள்ள உங்கள் பணத்தை முதலீடு செய்யத்தூண்டும் scamகள். இணயதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பிரபலமான celebrities களைக் கொண்டு இது தொடர்பாக விளம்பரம்- promote செய்தல். Crypto currency, தங்கம், ஆதனம் என்பவற்றில் முதலீடு செய்து செல்வத்தைப் பெருக்க வாய்ப்பு இருப்பதாக ஆசை காட்டி பணம் பறிப்பது. ஆஸ்திரேலியாவில் இப்படியான scam களிலேயே பலர் பணத்தை இழப்பதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்து மிகப் பிரதானமான ஒன்று, Flubot scam என்பது. அதாவது Mobile தொலைபேசிவழியாக ஒரு missed call தருவது; ஒரு text வழியாக link ஒன்றை அனுப்புவது; voice mail ஒன்றை அனுப்பவது; parcel delivery ஒன்று காத்திருப்பதாக செய்தி அனுப்புவது. அவற்றை ஒருவர் click செய்யும்போது, ஏமாற்றுக்கார்ர்கள் உங்கள் மொபைல் போனை அல்லது கணினியை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்து உங்கள் கடவுச்சொல் வங்கிக் கணக்குகள் என்பவற்றை தம்வசப்படுத்திக்கொள்வது.

அதேபோல உங்களுக்கு சேவை வழங்கும் telecommunications கம்பனி தொழில் நுட்பவியலாளர்கள் போல நடித்து உங்கள் கணினியின் software ஐப் பரிசோதிக்கவேண்டும் என்று கூறி உங்கள் கணினியின் remote access அதாவது இன்னொரு இடத்திலிருந்து உங்கள் கணியை இயக்கும் அனுமதியைப் பெற்றுக் கொள்வது - அதன் மூலமாக உங்கள் வங்கி நடவடிக்கைகளை தம் வசப்படுத்துவது.

Phishing என்பதும் இதனை ஒத்தது. மின்னஞ்சல், sms, மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலமாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து தொடர்புகொள்வது போலத் தொடர்புகொண்டு ஒருவரது வங்கிக் கணக்கு, இலக்கம், credit cart இலக்கம் கடவுச்சொல் என்பவற்றை பெற்றுக்கொண்டு துஷ்பிரயோகம் செய்வதும் அடங்கும். இவைகளையே மிகப் பிரதானமான scams ஏமாற்றுவேலைகள் என்று சொல்லலாம்.

Mobile வழியாக missed call தருவது, text வழியாக link ஒன்றை அனுப்புவது, voice mail அனுப்பவது; parcel delivery காத்திருப்பதாக செய்தி அனுப்புவது. அவற்றை ஒருவர் click செய்யும்போது மொபைல் போனை அல்லது கணினியை தம்முடைய கட்டுப்பாட்டில் எடுத்து நமது கடவுச்சொல் & வங்கிக் கணக்குகளை தம்வசப்படுத்திக்கொள்வது.

இவற்றைத்தவிர வேறு scamகளும் இருக்கின்றன. Romance scam என்று ஒன்றிருக்கிறது. அதாவது Dating என்பது பற்றி நேயர்கள் அறிந்திருப்பார்கள். இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு online dating sites என்று தளங்கள் இருக்கின்றன. இதில் ஆர்வமுள்ள ஒருவரது தொலைபேசி எண்ணைப் பெற்ற ஒருவர் அவரைத்தொடர்பு கொண்டு உண்மையில் அவருடன் உறவை அல்லது தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விழைபவர் போல சில மாதங்களுக்கு தொலைபேசி வழியாகவே தொடர்பிலிருந்து திடீரென்று, தான் ஆஸ்திரேலியா வர பணம் அனுப்பும்படியோ அல்லது தனது தாய் அல்லது தந்தையின் வைத்தியச்செலவுக்காகவோ பணம் அனுப்பும்படி கோருவது. இது romance scam என்று அழைக்கப்படுகிறது.

Word writing text Romance Scam. Business concept for Dating Cheat Love Embarrassed Fraud Cyber Couple Affair written on Cardboard Piece on the jute background Marker and Hearts next to it.
Word writing text Romance Scam. Business concept for Dating Cheat Love Embarrassed Fraud Cyber Couple Affair written Cardboard Piece the jute background Marker and Hearts next to it. Source: iStockphoto / Artur/Getty Images/iStockphoto

அடுத்து puppy scam என்று ஒன்று உண்டு. இப்படியான scam கள் தொடர்பாக இங்கு நீதிமன்றங்களில் சில வழக்குகளும் இருக்கின்றன. அதாவது, ஆஸ்திரேலியர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள். அதிலும் குறிப்பாக நாய்க்குட்டிகளை, உயர்ந்த இன நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள். Pedigree puppy எனும் இவ்வகை நாய்க்குட்டிகளின் விலை பல ஆயிரம் டாலர்களாகும். இவ்வகை நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாகவும் அவற்றை தங்களுக்கு ஒதுக்கிக்கொள்ள முன்பணம் அனுப்பும்படியும் இணையதளங்கள் மூலமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதில் ஏமாந்தவர்கள் அனுப்பிய முன்பணமும் திரும்பக் கிடைப்பதில்லை. நாய்க்குட்டியும் கிடைப்பதில்லை.

இதைத்தவிர Advance fee scam என்று ஒன்று உண்டு. பெருந்தொகையான பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு transfer செய்யப்படவிருப்பதாகவும் அதற்கான ஆரம்ப, காரியாலய செலவுகளுக்காக ஒருதொகைப் பணம் அனுப்பும்படி கோரும் scamகள்.

அதேபோல சர்வதேச லாட்டரியில் பெருந்தொகைப் பணத்தை ஒருவர் வென்றிருப்பதாகவும் அதை process செய்ய ஒரு தொகை பணத்தை அனுப்பும்படி கோரும் scamகள். குறிப்பாக இம்மாதிரியான scamகள் Nigeria போன்ற நாடுகளில் இருந்தே அனுப்பப்படுவதாக க் கூறப்படுகிறது.

Work from home and earn என்ற வகையில் விளம்பரப்படுத்தி money laundering - சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை நல்ல பணமாக அல்லது black money யை white money ஆக மாற்றும் scam.

Money mule scam என்பது மற்றொன்று. அதாவது ஒருவருக்கு ஒரு பெருந்தொகைப் பணத்தை அனுப்பி அதை மற்றொரு நபருக்கு gift card ஆக அல்லது wire transfer என்ற முறையில் அனுப்பச்சொல்வது. இது work from home and earn என்ற வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு, money laundering - சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை நல்ல பணமாக அல்லது black money யை white money ஆக மாற்றும் scam.

Emergency response themed scam எனபது இன்னொன்று. இயற்கைப் பேரிடர், காட்டுத்தீ, பஞ்சம் போன்றவற்றிற்கு நிதி சேகரிப்ப்பதாக ஏமாற்றும் scam களையும் குறிப்பிடலாம். இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.

fishing rod is harvesting user data in cyberspace.
fishing rod is harvesting user data in cyberspace. Source: Moment RF / sarayut Thaneerat/Getty Images

இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகளும் உள்ளன. அதாவது, மின்னஞ்சல்கள், chain letters என்ற சங்கிலித்தொடர்கடிதங்கள், அரச மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பற்றியும் அவை உண்மையானவைதானா என்பது பற்றியும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம்.

சட்ட ரீதியாகத் தேவைப்பட்டாலொழிய, எந்த காரணத்தைக்கொண்டும் உங்கள் பெயர், வங்கி விவரம், கடவுச்சீட்டு இலக்கம், பிறப்புச்சான்றிதழ், மற்றும் பிரதான ஆவணங்களை யாருக்கும் கொடுக்கக்கூடாது.

பணம் அனுப்பும்படி வெளிநாடுகளில் இருந்து அல்லது உள்நாட்டிலிருந்து வரும் எந்த கோரிக்கையையும் நிராகரித்துவிடவேண்டும்.

உங்கள் கணினியில் நீங்கள் செயல்படமுடியாதவாறு தடையை ஏற்படுத்தி அந்த தடையை நீக்க பணம் அனுப்பும்படி யாராவது கோரினால் பொலிஸாருக்கு அறிவித்துவிடுங்கள்.

எனவே பல முறைகளில் நாம் இந்த scam அல்லது மோசடிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இதுதொடர்பான மேலதிக விபரங்களை Australian Cyber Securuty Centre தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

கட்டுரையாளர்: R.சத்தியநாதன்

——————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


5 min read

Published

Source: SBS


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now